Advertisment

Punnagai Logo

செப்டம்பர் மாதம், இன்டர்நெட் பக்கம் தலை வச்சு படுக்கமாட்டோம்..! -10,000த்துக்கும் மேற்பட்டோர் உறுதி..!

சமூக வலைத்தளத்தில் செலவிடும் நேரத்தை குறைக்கும் வகையில் இந்த மாதம் முழுவதும் முகநூல், யு -டுயு ப் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில்லை என 51 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

சமூக வலைத்தளத்திலேயே மக்கள் வெகுநேரம் செலவிடுவதாகவும், அதனால் பல்வேறு பாதிப்பிற்குள்ளாவதாகவும் "ராயல் சொசைட்டி பார் பப்லிக் ஹெல்த்" எனும் லண்டனைச் சேர்ந்த அமைப்பு, Scroll Free September எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட பல்வேறு நாடுகளைச் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அணைத்து  சமூக வலைத்தளங்களை இந்த மாதம் முழுக்க பயன்படுத்தப்போவதில்லை என உறுதிமொழி எடுத்திருப்பதாகவும், இன்னும் பலர் இந்த விழிப்புணர்வு பயணத்தில் இணையவுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. 

 
 

Advertisment

English Summary

In September, the head of the Internet did not lie down ..! -10,000 more confirmation ..

 
NewsFast Logo