Advertisment

Punnagai Logo

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியார்களிடம் கூறியதாவது - 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும். மீனவர்கள் வரும் 10-ம் தேதி வரை அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.  வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறி ஒரிசாவில் கரையை கடக்கும். தமிழகத்தில் நாளை முதல் மழை படிப்படியாக குறையும்.  வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல்  மாறியுள்ளது.

 
 

Advertisment

English Summary

In Tamil Nadu and Pondicherry in the next 24 hours, moderate rain

 
NewsFast Logo