Advertisment

Punnagai Logo

அதிகரிக்கும் போலி ஐ.பி.எஸ். அதிகாரிகள் !! காவல் ஆய்வாளரை மிரட்டியதாக ஒருவர் கைது

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் ஜீனத்பேகம். அவரது கணவரின் சகோதரரின் மனைவியான சஹானாவுக்கும், ஜீனத் பேகத்திற்கும் வீடு தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதை அடுத்து, அவசர காவல் எண் 100க்கு ஜீனத் பேகம் போன் செய்துள்ளார். அதன் அடிப்படையில் பெண் போலீஸ் ஒருவர் இதுகுறித்து விசாரிக்க அங்கு சென்றுள்ளார்.

அப்போது, அந்த வீட்டுக்கு, போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டி, சுழல்விளக்கு பொருத்தப்பட்ட வாகனத்தில் வந்த ஒருவர் சஹானாவுக்கு சாதகமாக பேசியுள்ளார். தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்று கூறிய அந்த நபர், காவல் நிலையத்தில் வந்து பேசிக் கொள்வதாகக் கூறி பெண் காவலரை விரட்டும் பாணியில் பேசியுள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கு சகானாவுடன் சுழல் விளக்கு பொருத்தப்பட்ட வாகனத்தில் வந்த அந்த நபர், தான் இன்டர்போல் டிசி என்றும், ஏடிஜிபி மஞ்சுநாதா தனக்கு தெரிந்தவர் என்றும் தோரணையாகப் பேசியுள்ளார்.

 

 

இதனால் சந்தேகம் அடைந்த ஆய்வாளர் தொடர்ந்து விசாரித்ததில், வந்த நபர் போலி ஐ.பி.எஸ். அதிகாரி என்பதும், மேற்கு மாம்பலத்தைச் சிவனேசன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, சிவனேசனைக் கைது செய்த போலீசார், சைரன் வைத்த கார் மற்றும் அதில் இருந்த கஞ்சாப் பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர். வேறு ஏதேனும் மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 
 

Advertisment

English Summary

Increasing fake IPS Officers !!

 
NewsFast Logo