இதுவரை தேர்தலை சந்திக்காமல், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த கனிமொழி, இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.
தி.மு.க.வில் அவருக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட இருக்கிறது. ஆனாலும், ஒரு சில மாதங்களுக்கு முன்பே அங்கு தேர்தல் பணிகளில் கனிமொழி ஈடுபடத் தொடங்கிவிட்டார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேரடியாக சென்று கலந்து வருகிறார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் நடத்தப்படும் 39 ஊராட்சி சபை கூட்டங்களில் கனிமொழி கலந்துகொண்டுள்ளார். மேலும், 65 கூட்டங்களில் கலந்துகொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால், மத்திய மந்திரி பதவியை கனிமொழிக்கு கேட்டு பெறவும் தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Kanimozhi to contest in Tuticorin