Advertisment

Punnagai Logo

கலைஞரின் வெண்கல உருவச்சிலை அமைக்கும் பணி தீவிரம்..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவுவதற்காக உருவாக்கப்படும் கலைஞர் கருணாநிதி உருவச்சிலை மாதிரியை, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, 8 அடி உயரமுள்ள வெண்கல சிலை அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ளது. சிலையை வடிவமைக்கும் பணி, திருவள்ளூர் மாவட்டம் புதுப்பட்டு பகுதியில் நடைபெற்று வருகிறது.

தீனதயாளன் எனும் சிற்பி சிலையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சிலையின் மாதிரி வடிவத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிற்பக்கூடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். சிலையை பார்வையிட்டபின், அதில் சிற்சில மாறுதல்கள் செய்யுமாறு சிற்பியிடம் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 
 

Advertisment

English Summary

Karunanithi Bronze Idol

 
NewsFast Logo