Advertisment

Punnagai Logo

கஜா புயல் நிவாரணம் - பம்பரமாய் சுழன்ற அமைச்சர்..! 

கஜா புயலின் வேகம் பல மாவட்ட மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுவிட்டது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று. 

புயல் பாதிப்புகளில் இருந்து புதுக்கோட்டையை மீட்டெடுப்பதில் புயல் வேகத்தில் செயல்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அம்மாவட்ட மக்களின் பாராட்டுகளை அள்ளியிருக்கிறார்.

வெள்ளி கிழமை காலை 6மணிக்கெல்லாம் புயல் கோரதாண்டவம் ஆடி ஊரே அழிவில் இருந்தது, மின்சாரம் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை, செல்ஃபோன்களில் சார்ஜ் இல்லை கூலி வேலை பார்ப்பவர்கள் அன்று வேலைக்கு போனா தான் சாப்பாடு, இதெல்லாம் சரியாக ஒரு மாசத்துக்கு மேல ஆகும்னு எல்லாருக்குமே தெரியும்.

வெள்ளி இரவு புதுக்கோட்டை முழுவதும் மின்சாரமின்றி கரும் இருட்டில் சுடுகாடாய் இருந்தது. அன்று இரவு யாரும் சரியாக தூங்கவில்லை.

5ரூபாய் மெழுகுவர்த்தி 50 ரூபாய்க்கு விற்றார்கள், கொசு வத்தி வேற கிடைக்கல. கொஞ்ச நாள் வேறு ஊருக்கு போயிறலாம்ங்கிறது தான் எல்லோரோட மனநிலையும்

சனிக்கிழமை விடிந்தது ஆவின் பால் தேவைக்கு அதிகமாகவே அமைச்சரின் முயற்சியால் பூத்களில் இறக்கி விட்டார்கள்

குடிக்க தண்ணீர் இல்லாமல் குடத்துடன் ஆண்களும் பெண்களும் அழைந்தார்கள், தண்ணீர் கேன் 300ரூபாய் வரை விற்க ஆரம்பித்து விட்டார்கள், ஏழைகளும், நடுத்தர மக்களும் செய்வதறியாது தவித்தார்கள்.

எல்லோருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைச்சரால் அன்று மாலை காவரி தண்ணீர் எல்லோர் வீட்டிலுமே வந்தது. 

விழுந்த மரங்களை அகற்றுவதில், மின் கம்பங்களை மீண்டும் நிர்மாணித்து மின் தடையை சரிசெய்வதிலும் அவர் காட்டிய வேகம் அசாத்தியமானது.

நிவாரணப் பணிகளில் காயம் அடைந்த ஊழியர்களை அவரே உடனிருந்து தூக்கிச்சென்று சிகிச்சைக்கு உதவிய நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடந்தன.

ஞாயிறு பிறந்தது பண வசதி உள்ளவர்கள் சொகுசு அறைகளிலும் வீட்டில் ஜனரேட்டர் வசதியுடனும் உறங்கினார்கள் மற்றவர்கள் ஏங்கிக் கொண்டிருந்த போது வெளிமாவட்ட, மாநில மின்சார ஊழியர்களை அமைச்சர் முதலில் புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தார், அன்று இரவே டவுனுக்கு மட்டும் கரண்ட் வந்தது மக்கள் மகிழ்ச்சி ஆனார்கள்

திங்கள் பிறந்தது அமைச்சர் களத்தில் இறங்கி அவரே மின்சார ஊழியரோடு சேர்ந்து வேலை பார்க்க துவங்கினார், பின் ஊர் மக்களும், இளைஞர்களும் கலத்தில் குதித்தனர். 4நாளில் 42வார்டும் மின்னியது,

கிராமங்கள் இன்னும் சரியாக மின்சாரம் வரவில்லை என்பது அனைவருக்கும் வருத்தம் தான். ஆனால் தமிழக அரசாலும், சமூக ஆர்வலர்களாலும், வெளி மாவட்ட மக்களாலும் உதவிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் முதற் கட்டமாக வீட்டிற்கு 5கிலோ அரிசி வழங்கி வருகிறார்.  அவரது குடும்பத்தினரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .

கஜா புயலுக்கு சவாலாக இயற்கையோடு போராடி இரவு பகலாக தூக்கம் தொலைத்து உதவிய தூங்கா அமைச்சருக்கு புதுக்கோட்டை  மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

 
 

Advertisment

English Summary

Minister Vijayabaskar - cyclone relief

 
NewsFast Logo