Advertisment

Punnagai Logo

கிராமங்கள் தான் நாட்டின் உயிர்நாடி - கிராமசபை கூட்டத்தில் உருகிய ஸ்டாலின் 

 "மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்" என்ற கொள்கை முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

திருவாரூர் அருகே புலிவலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனை தொடங்கி வைத்தார். 

இதை தொடர்ந்து, கிராம மக்களின் முன்பாக பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது : "நான் ஒரு கோவிலுக்கு வந்ததை போன்று உணர்கிறேன். கிராமம் தான் கோவில். மகாத்மா காந்தி கூட கிராமத்தை தான் கோவில் என்று தான் கூறுவார். அரசியலே இதுபோன்ற கிராமங்களில் தான் உருவாகியுள்ளது. கிராமங்கள் தான் நாட்டின் உயிர்நாடி. 

மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் லோக்சபா எம்.பிக்கள். எம்.எல்.ஏக்களால் தேர்தெடுக்கப்படுவர்கள் ராஜ்ய சபா எம்.பிக்கள். எம்.பிக்கள் டெல்லியில் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். ஆனால் அனைத்திற்கும் காரணமான எம்.எல்.ஏக்களை தேர்தெடுப்பது நீங்கள் தான். மத்தியில் எம்மாதிரியான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்." என்று அவர் பேசினார். 
 
வருகிற பிப்ரவரி மாதம் 17ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டங்களில் திமுக பிரதிநிதிகள், பேச்சாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

MK Stalin attends Panchayat meet

 
NewsFast Logo