Advertisment

Punnagai Logo

திமுகவின் தலைவராகிறாரா மு.க.ஸ்டாலின் ?

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெறுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 28ம் தேதி உடல் நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 10 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை உயிரிழந்தார்.

இந்நிலையில்,திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெற உள்ளது. இ துகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

மேலும் , ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்திலோ அல்லது அதனைதொடந்து நடைபெற இருக்கும் கூட்டத்திலோ , திமுக விற்கு தலைமை ஏற்கும் தலைவர் பதவியை மு.க .ஸ்டாலினுக்கு வழங்கபடலாம் என அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

 
 

Advertisment

English Summary

MK Stalin is the leader of the DMK?

 
NewsFast Logo