Advertisment

Punnagai Logo

வைகோ மீது கொலைமுயற்சி வழக்குபதிவு..!

தூத்துக்குடியில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைகோவை தரக்குறைவாக பேசியதாக கூறி, 

கடந்த 6 ஆம் தேதி, தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்திற்குள்,வழக்கறிஞர் ஜெகதீஸ்ராம் என்பவரை மதிமுகவினர் சரமாரியாக தாக்கினர்.

இதனையத்தொடர்ந்து,இந்த சம்பவத்தில் வைகோ உள்ளிட்ட 30 பேர் மீது, ஜெகதீஸ்ராம் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஜெகதீஸ்ராம் வழக்கு தொடர்ந்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், வைகோ உள்ளிட்ட 30 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய தென்பாகம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

Murder case against Vaiko

 
NewsFast Logo