Advertisment

Punnagai Logo

மாணவ மாணவியருக்கு புதிய கட்டுப்பாடுகள்..! - அண்ணா பல்கலைகழகம் அதிரடி ..!

சென்னை, அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளில், மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது. 

இந்நிலையில்,புதிய மாணவர்களுக்கு, இரண்டு வாரங்களுக்கு முன், ஒருங்கிணைப்பு பயிற்சி துவங்கியது.அதில், புதிய மாணவர் கள், பல்கலை மற்றும் கல்லுாரி வளாகத்தில், எப்படி நடந்து கொள்ள வேண்டும்; பாடங்களை படிக்கும் முறை ஆகியவை குறித்து, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும்,'சீனியர்' மாணவர்கள், 'ஜூனியர்' மாணவர்களை, 'ராகிங்' செய்யாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதற்காக,ராகிங் தடுப்பு வாகனம், ரோந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது.பல்கலையின் வளாகத்தில், ராகிங் தடுப்பு குழுவினர், கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தவிர மாணவ - மாணவியருக்கு, சுய ஒழுக்கம் தொடர்பான, பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவுறுத்தபட்டுள்ளன..

அவை..

வளாக பகுதிகளில், அரட்டை அடித்து, நேரத்தை வீணடிக்கக் கூடாது; வகுப்புகளை புறக்கணிக்காமல், பங்கேற்க வேண்டும். மாணவ - மாணவியரிடம், ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது

பல்கலை வளாகத்திற்குள், காதில், 'ஹெட் போன்' கருவி அணிந்து வரக் கூடாது

மொபைல் போன், 'ஹெட்செட்டை' கல்லுாரி வளாகத்தில் பயன்படுத்தக்கூடாது. மாணவர்களும், மாணவி யரும், கைக்குட்டை மற்றும் துப்பட்டா போன்றவற்றை கொண்டு முகத்தை மூடி, வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது

வாகனத்தில் வரும்போது, 'ஹெல்மெட்' அணிந்திருந்தால், அதில், முகத்தை மூடும் கண்ணாடியை, திறந்து விட்டிருக்க வேண்டும்

ஒவ்வொரு மாணவியும், அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். பேராசிரியர்களும், பல்கலை ஊழியர்களும், காவலாளிகளும், அடையாள அட்டையை காட்டச் சொன்னால், மறுப்பு தெரிவிக்காமல் காட்ட வேண்டும்.

என  நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன

 
 

Advertisment

English Summary

New controls for students! - Anna University Action ..!

 
NewsFast Logo