Advertisment

Punnagai Logo

இனி "அக்னி" வெயில் தான் ..நாளை முதல் 24 நாட்கள்..

அக்னி நட்சத்திரம் என சொல்லப்படும் கத்திரி வெயில் காலம், நாளை முதல் துவங்குகிறது. 24 நாட்களுக்கு இது தொடரும் , பாரம்பரிய பஞ்சாங்க கணிப்புகளின் படி, அக்னி நட்சத்திர காலத்தில் நிலவும் கத்திரி வெயில், கோடையின் உச்சகட்ட வெயில் காலமாக கருதப்படுகிறது.

ஜோதிடம் மற்றும் பஞ்சாங்க கணிப்புகளின்படி, பரணி நட்சத்திரம் துவங்கி, கிருத்திகை நட்சத்திரம் வரையிலான, சூரியனின் பயண காலம், அக்னி நட்சத்திரம் என்றும், கத்திரி வெயில் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான, கத்திரி வெயில் காலம், நாளை துவங்குகிறது. 28ம் தேதி முடிகிறது. இதன்படி, 24 நாட்கள், வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும்.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் கூறும் போது :தற்போது, "கோடையின் இயல்பை ஒட்டியே வெயில் நிலவுகிறது. வடக்கு மற்றும் தெற்கு திசை காற்று சந்திக்கும் இடங்களில், கோடை மழை பெய்யும்".என்றார் 

 
 

Advertisment

English Summary

Now "Agni" is the sun .. tomorrow is 24 days ..

 
NewsFast Logo