Advertisment

Punnagai Logo

தேங்காய் பறித்தவருக்கு காட்சி அளித்த நர்த்தன "கிருஷ்ணர்" - திருவாரூரில் பரபரப்பு

திருவாரூர்:முத்துப்பேட்டை அருகே, குளத்தில், ஐம்பொன் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே, நாச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், சாகுல்அமீது. இவர், நேற்று, சிறுபனையூரிலுள்ள, தென்னந்தோப்பில், ஆட்களை வைத்து தேங்காய் பறித்தார். 

அப்போது, அருகில் உள்ள குளத்தில் தேங்காய்கள் விழுந்தன. குளத்தில் இறங்கி, தேங்காய்களை தொழிலாளி ஒருவர் எடுத்துள்ளார். அப்போது, சாக்கு மூட்டை தென்பட்டுள்ளது.

அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது, அதில், ஐம்பொன்னால் ஆன, நர்த்தன கிருஷ்ணர் சிலை இருந்தது தெரிய வந்தது.  இச்சிலை, 2 அடி உயரம், 11 கிலோ எடைகொண்டது. சிலையின் ஒரு கை,கால் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தகவல் அறிந்த, திருத்துறைப்பூண்டி தாசில்தார் மகேஷ்குமார், சிலையை கைப்பற்றி, தாலுாகா அலுவலகத்தில் வைத்துள்ளார்.

 
 

Advertisment

English Summary

Nurtana "krishna" - the scene of the coconut scrapper

 
NewsFast Logo