Advertisment

Punnagai Logo

தினகரன் அணிக்கு பகிரங்க அழைப்பு விடுக்கும் அமைச்சர் பாண்டியராஜன்

பிரிந்து சென்றவர்கள் திரும்பி வாருங்கள், ஓன்று சேர்ந்து சகோதர்களாக செயல்படலாம் என்று அமைச்சர் பாண்டியராஜன் தினகரன் அணிக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணியில் இருந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

இந்தநிலையில், உலக அளவில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை புதையல் கிடைக்க கூடிய இடமாக தமிழகம் இருந்து வருகிறது என்று  அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அருங்காட்சியகம் விரைவில் அமைக்கபட உள்ளது என்று கூறினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் வரவேற்போம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 

Advertisment

English Summary

Pandiarajan invites TTV faction to rejoin

 
NewsFast Logo