Advertisment

Punnagai Logo

பெப்பர் சிக்கன் - சண்டே ஸ்பெஷல்

தேவையானவை :

சிக்கன்                                         -1/2 கிலோ 

மிளகுத்தூள்                                - 4 டீஸ்பூன் 

மிளகாய்த்தூள்                           - 1 டீஸ்பூன் 

வெங்காயம்                                - 100 கிராம் 

பச்சை மிளகாய்                         - 4

உப்பு                                              - தேவையான அளவு 

எலுமிச்சம் பழம்                        - 1/2

பொட்டு கடலைத்தூள்             - 1 கை 

எண்ணெய்                                  - 1 குழி கரண்டி 

கறிவேப்பிலை                            - சிறிதளவு

 

செய்முறை :

சிக்கனை துண்டுகளாக்கி , வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும் , அத்துடன் மிளகாயையும் கீறி கொள்ளவும்.

ஒரு அகலமான கிண்ணத்தில் மிளகுத்தூள், மிளகாய்த்தூள் , எலுமிச்சம் பழச்சாறு, பொட்டுக்கடலைத்தூள் , போதுமான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

இந்த மசாலாவில் சிகனைத் தோய்த்து ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறி வேப்பிலை போட்டு தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயத்தையும் , கீறிய மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.

மசாலா தோய்த்த சிக்கனை எண்ணையில் பொரித்தெடுத்து தாளித்த வெங்காயத்துடன் சேர்த்து இறக்கவும்.

 
 

Advertisment

English Summary

Pepper Chicken - Sunday Special

 
NewsFast Logo