Advertisment

Punnagai Logo

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு

   
பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும், மத்திய அரசு கலால் வரியில் 1.50 ரூபாயும் குறைத்துள்ளதால் பெட்ரோல் டீசல் மீதான விலை மொத்தம் ரூ.2.50 குறைகிறது. 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை கண்டுள்ளதால், பெட்ரோல் டீசல் விலையும் தினம்தினம் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. 

 இதனால் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மற்றும் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் பிரதமர் மோடி இன்று அவசர அலோசனை நடத்தினார்.

இந்த அலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதிமந்திரி அருண் ஜேட்லி, தற்போதைய பொருளாதார நிலையை அரசு மிகவும் உண்ணிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார்.இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50 குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும், மத்திய அரசு கலால் வரியில் 1.50 ரூபாயும் குறைக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகளும் ரூ.2.50 குறைக்க வலியுறுத்தப்படும். இதுதொடர்பாக மாநிலங்களுக்கு கடிதம் எழுதப்படும். மத்திய அரசின் வலியுறுத்தலை மாநில அரசுகள் ஏற்றால் விலை ரூ.5 குறைய வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.

சென்னையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.33-க்கும், டீசல் விலை லிட்டர்க்கு ரூ.79.79-க்கும் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

 
 

Advertisment

English Summary

Petrol and diesel prices cut by Rs. 2.50 per liter

 
NewsFast Logo