Advertisment

Punnagai Logo

பிக்பாஸ் 2 - இந்த முறை சிக்கியது “தாடி” பாலாஜி குடும்பமா..?

விஜய் டிவி-யின் பிரபலம்  தாடி பாலாஜியும் அவர் மனைவி நித்யா பாலாஜியும் `பிக் பாஸ்’ வீட்டுக்குள் போட்டியாளராகச் செல்ல உள்ளனர்.

அதிச்சியாக உள்ளதா..? ஆனால் இது உண்மைதான்.

முன்னதாக,‘தாடி’ பாலாஜி விஜய் டிவியில் ‘கலக்கப் போவது யாரு’, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்’ போன்ற ஷோக்களில் மக்களை சிரிக்கவைத்தவர். அவரின் டைமிங் சென்ஸ் பிரசித்தி பெற்றது.. அவர் நித்யாவை காதலித்து மணந்துகொண்டவர். பாலாஜி மூலம் நித்யாவும் விஜய் டிவியின் சில ஷோக்களில் தலைகாட்டினார். 

இந்நிலையில்,டி.ஆர் மற்றும் நடிகை சதா இருவரும் நடுவராக இருந்த `ஜோடி’ ஷோ ஷூட்டிங் நடந்தபோதுதான் கணவன் – மனைவியான இருவருக்குமிடையே பிரச்னை என்கிற விஷயமே வெளியில் தெரிந்தது. 

அதைத்தொடர்ந்து சில நாள்களில் பாலாஜி மீது போலீஸில் புகார் அளித்தார் நித்யா. இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியதாகவும் வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.

இதற்கிடையே  சில நாள்களுக்கு முன் இவர்கள் இருவரையும் சமரசம் செய்து வைக்க சிம்பு செய்த முயற்சியும் பெரிதாக வெற்றி பெற்றதாக தெரியவில்லை.. தற்போது  மகள் போஷிகாவுடன் தனியாக வாழும் நித்யா, பாலாஜியை நேருக்கு நேர் சந்தித்தே சில வருடங்களாகிவிட்ட நிலையில், தற்போது, இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறார்கள்.

மேலும் , பாலாஜிக்கு இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. நித்யா மறுத்ததாகவும் தொடர்ந்து பேசி, கன்வின்ஸ் செய்து கலந்துகொள்ளச் சம்மதிக்க வைத்ததாகவும் தெரிகிறது.

Image result for big boss 2 and balaji family

பிறரின் வாழ்க்கையில் நடத்தப்பதை தெரிந்து கொள்ளும் மக்களின் மனதில் உள்ள பாதக குணத்திற்கு தீனி போடும் விதமாக இந்த பிரச்னையை வைத்து கொண்டு பிக் பாஸ் களை கட்ட போவதாக தெரிகிறது.

ஆனால்  வெளியில் ,"எப்படியோ ஒன்றாக வசித்த தம்பதி சில வருட பிரிவுக்குப் பிறகு, 100 நாள்கள் ஒரே வீட்டில் தங்கப்போகிறார்கள்" இந்த நல்ல காரியத்தை இந்த நிகழ்ச்சி செய்ய போவதாக ஒரு எண்ணத்தை பதிய வைக்க போகிறார்கள்..

மக்களும்  'அந்த வீட்டைவிட்டு வெளியே வருகிறபோது இருவரும் சேர்ந்திருப்பார்களா.'  என என்னும் வகையில் தான் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 

Advertisment

English Summary

Piccas 2 - This time the "bearded" Balaji family ..?

 
NewsFast Logo