Advertisment

Punnagai Logo

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினார் நடிகர் பிரகாஷ் ராஜ் 

டெல்லி சென்றுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்து பேசினார். 

வரும் மக்களவை தேர்தலில், பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில் இருந்து தான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், 
தனது கொள்கைகளுடன் ஒத்துப்போகும் தலைவர்களை சந்தித்து வருகிறார். 

அந்த வகையில், தன்னைப் போலவே பா.ஜ.க எதிர்ப்பில் தீவிரமாக உள்ளவரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று சந்தித்து பேசினார்.

சில மாதங்களுக்கு முன், டெல்லியில் IAS அதிகாரிகள் வேலைநிறுத்தத்தைக் கண்டித்து டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதம் மேற்கொண்டு இருந்தபோது, அரவிந்த் கேஜிரிவாலுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 

 
 

Advertisment

English Summary

Prakash Raj met Aravind Kejriwal

 
NewsFast Logo