Advertisment

Punnagai Logo

அமைச்சர் சிவி சண்முகம், ஜெயலலிதாவை சிகிச்சையின் போது பார்த்தார் - புகழேந்தி சாட்சி 

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை என்னுடன் சேர்ந்து சிவி சண்முகம் பார்த்தார் என புகழேந்தி பேட்டி அளித்துள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கர்நாடக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி, கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திற்கு வந்தார்.

அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 'ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளாரே அது குறித்து உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டபோது அவர் கூறியதாவது :

"ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது நான் சென்று பார்த்தேன். அப்போது அமைச்சர் சி.வி.சண்முகமும் வந்து பார்த்தார். அப்போது எந்த கருத்தையும் அவர் கூறவில்லை.

ஆனால், தற்போது அமைச்சர் சி.வி.சண்முகம் பல்வேறு கருத்துக்களை கூறுகிறார். ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது என்று தெரிவிக்கிறார். மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கேவலமாக பேசுகிறார். இவர் சசிகலாவின் காலில் விழுந்து அமைச்சரானவர்." என்று புகழேந்தி தெரிவித்தார். 

 
 

Advertisment

English Summary

Pugazhenthi says CVS met Jayalaitha while in treatment

 
NewsFast Logo