Advertisment

Punnagai Logo

வைர வியாபாரி நிரவ் மோடி சகோதரி பூர்விக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்' ..!

புதுடில்லி: சர்வதேச போலீஸ் அமைப்பு, பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடியின் சகோதரி, பூர்விக்கு எதிராக, 'இன்டர் போல்' எனப்படும் 'ரெட் கார்னர் நோட்டீஸ்' வெளியிட்டுள்ளது.

மும்பை நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடியும், அவனது உறவினரும், 'கீதாஞ்சலி ஜெம்ஸ்' நிறுவன அதிபருமான, மெஹுல் சோக்சியும், 13 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் மோசடி செய்தனர்.

பின், வெளிநாட்டுக்கு தப்பியோடிய அவர்களை தேடும் பணியில், சி.பி.ஐ., தீவிரம் காட்டி வருகிறது. சி.பி.ஐ.,யின் நடவடிக்கைகளால், நிரவ் மோடிக்கு எதிராக, இன்டர்போல் அமைப்பு, ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக, நிரவ் மோடியின் சகோதரி, பூர்வி மோடி, 44, என்பவருக்கு எதிராகவும், இன்டர்போல் அமைப்பு, ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளது. சர்வதேச கைது வாரன்ட் ஆக கருதப்படும், ரெட் கார்னர் நோட்டீசில், 'இந்தியாவில், சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், பூர்வி தேடப்பட்டு வருகிறார். அவரை கைது செய்து ஒப்படைக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. 

ஏற்கனவே பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில், கடந்த மார்ச்சில், அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், பூர்வியின் பெயர் இடம்பெற்றுள்ளது.இதற்கிடையே, நிரவ் மோடியுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட, மெஹுல் சோக்சிக்கு எதிராக, ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடும்படி, இன்டர்போல் அமைப்புக்கு, அமலாக்கத் துறை, நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளதாக, அமலாக்க துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

மேலும் , பெல் ஜியத்தில் மறைந்தி ருப்பதாக கூறப்படும் நிரவ் மோடியின் சகோதரன் நீஷல் மோடியை, நாடு கடத்தி கொண்டு வரும் முயற்சியில், சி.பி.ஐ., இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 
 

Advertisment

English Summary

Red Corner Notice to Diamond Murder Sister Puri

 
NewsFast Logo