Advertisment

Punnagai Logo

குறைக்கப்பட்ட பேருந்து கட்டண விபரங்கள்

தமிழகம் முழுவதும் பேருந்த கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி மாணவர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பேருந்து கட்டணம் சிறிய அளவில் குறைக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

குறைக்கப்பட்ட கட்டண விபரங்கள்:-

மாநகர பஸ்களில் குறைந்த பட்சமாக உயர்த்தப்பட்ட ரூ.5 கட்டணம் தற்போது ரூ.4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாநகர பஸ்களில் 80 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் பெரும்பாலான பஸ்கள் காலியாக ஓடின. தற்போது 40 சதவீதம் அளவிற்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 

வெள்ளை நிற சாதாரண பஸ்களில் குறைந்த பட்ச கட்டணமாக தற்போது ரூ.4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பஸ்களில் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.9 வசூலிக்கப்பட்டது. அது ரூ.6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. டீலக்ஸ் பஸ்சிற்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.13 கட்டணம் தற்போது ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வால்வோ ஏ.சி. பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.51 வசூலிக்கப்படுகிறது.

அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணமாக ரூ.1 தற்போது வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு டிக்கெட்டுடனும் ஒரு ரூபாய் சேர்த்து புதிதாக வசூலிக்கப்படுகிறது. விபத்து இன்சூரன்சுக்காக வசூலிக்கப்பட்ட இந்த கட்டணம் தற்போது சாதாரண பஸ்களுக்கு மட்டும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மற்ற எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்களுக்கு வசூலிக்கப்படுகிறது.

 
 

Advertisment

English Summary

Reduced bus payment details

 
NewsFast Logo