Advertisment

Punnagai Logo

ஸ்டெர்லைட்டுக்கு கிளியராகும் ரூட் – முதல்கட்டமாக நிர்வாக பணிகளை தொடங்க அனுமதி

துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலையில், நிர்வாக பணிகளை மேற்கொள்ள, 'வேதாந்தா' குழுமத்துக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்துள்ளது.

 தமிழகத்தின் துாத்துக்குடியில், வேதாந்தா குழுமம் சார்பில் நடத்தப்பட்டு வந்த, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, மே மாதம் நடந்த போராட்டம், கலவரத்தில் முடிந்தது. வன்முறையை கட்டுப்படுத்த, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் இறந்தனர். 

இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஆலைக்கு அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. 'ஆலையை நிரந்தரமாக மூட, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு, இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என்ற வேதாந்தா குழுமத்தின் கோரிக்கையை, தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்தது.

இதன்பின், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், 'இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு கூறப்படும் வரை, ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது, 'வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்ற தமிழக அரசின் கோரிக்கையையும், தீர்ப்பாயம் நிராகரித்தது.

இந்நிலையில், வேதாந்தா குழுமத்தின் மனு மீதான விசாரணை, தேசிய பசுமை தீரப்பாயத்தின் தலைவர், ஏ.கே.கோயல் தலைமையிலான, நீதிபதிகள், ஜவாத் ரஹீம், எஸ்.பி. வாங்டி ஆகியோர் இடம் பெற்ற அமர்வு முன், நேற்று நடந்தது.

விசாரணைக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

 ஸ்டெர்லைட் ஆலையில், நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள, வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் ஆலையை இயக்க, அனுமதி வழங்க முடியாது. இதை, மாவட்ட ஆட்சியர் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு தொடர்பான அறிவியல் பூர்வ ஆதாரங்களை, வரும், 20ம் தேதிக்குள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

 
 

Advertisment

English Summary

Root for Sterlite - Allow initially to start administrative tasks

 
NewsFast Logo