Advertisment

Punnagai Logo

மாணவர் கழுத்தை அறுத்த மாஞ்சா ..!

பட்டம் விடுவதற்கும், மாஞ்சா போடுவதற்கும் சென்னையில் தடை இருந்தாலும் , அதையும் மீறி சில சமயங்களில் அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன.அதை தடுக்க போலீசும் நடவடிக்கை எடுத்து தான் வருகிறது.

இந்நிலையில் சென்னையில், மாஞ்சா நுால் கழுத்தை அறுத்ததில், படுகாயமடைந்த கல்லுாரி மாணவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை, கொருக்குப்பேட்டை, அரிநாராயணபுரத்தைச் சேர்ந்தவர், நாராயணன். இவரது மகன் அரிகிருஷ்ணன், 19; தனியார் கல்லுாரி மாணவர். அரிகிருஷ்ணன், நேற்று காலை, கொருக்குப்பேட்டை வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்தார். 

அப்போது, திடீரென அவர் மீது வந்து விழுந்த மாஞ்சா நுால், அரிகிருஷ்ணன் கழுத்தை அறுத்தது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதனையடுத்து,அப்பகுதியில் இருந்தவர்கள், அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 
 

Advertisment

English Summary

Student's throat

 
NewsFast Logo