Advertisment

Punnagai Logo

உலகின் மிக உயரமான சிவலிங்கம்... மஹா சிவராத்திரி அன்று திறப்பு 

தமிழக கேரளா எல்லையில் உள்ள சிவ பார்வதி ஆலயத்தில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பத்து கோடி ருபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட இந்த சிவலிங்கம்தான் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்தது. 

இந்த சிலையை உருவாக்க ஆறு ஆண்டுகளாக அறுபது பேர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சிலை வரும் மஹா சிவராத்திரி அன்று திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலகில் மிக உயரமான சிவலிங்கத்தை இந்த கோயிலில் அமைக்க, கடந்த 2012 ஆம் ஆண்டு ஆலய நிர்வாகம் முடிவு செய்தது. இதனையடுத்து, மஹேஸ்வரானந்தா சரஸ்வதி சுவாமிகள் இந்தியாவின் பல்வேறு சிவன் கோயில்களுக்கு சென்று அந்த கோயிகளின் மாதிரியை கொண்டு பணிகள் நடந்து வருகிறது. 

8 நிலைகளில் சிலை 111.2 அடி உயரத்தில் எட்டு நிலைகளில் ஒவ்வொரு நிலையிலும் தியான மண்டபங்களை கொண்ட இந்த சிவலிங்கத்தின் உள்ளே குகைக்குள் செல்வது போன்றும் பரசுராமர் அகத்தியர் உட்பட பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும் உள்ளது. 

கணபதி உட்பட பல கடவுள்கள் சிற்ப வடிமைப்புடன் உள்ளே தரை தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் சிவலிங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல் பகுதியான எட்டாம் நிலையில் கைலாய மலையில் சிவன் பார்வதி குடி கொண்டு இருப்பது போன்று அழகிய சிலையுடன் கட்டிட கலை அம்சங்களுடன் கட்டப்பட்டு உள்ளது. 

தற்போது 80 சதவீதம் பணிகள் நிறைவேறி உள்ளது. இந்த சிவலிங்கம் சிலை உலகில் மிக உயரமான சிவலிங்கம் என்று தேர்வாகி இந்தியா புக்காப் ரெக்காட்டில் இடம்பிடித்து உள்ளது. 

 
 

Advertisment

English Summary

Tallest Sivalingam

 
NewsFast Logo