Advertisment

Punnagai Logo

கோவை தாவரவியல் பூங்காவில் காதலர்களுக்கு தடை...

கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் தாவரவியல் பூங்கா பகுதியில் பல்வேறு சட்டவிரோத நிகழ்வுகள் நடைபெறுவதாக வந்த புகார்களையடுத்து, பூங்கா பகுதியில் காதலர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

திருமணமாகதவர்கள் காதலர்கள் என்ற போர்வையில், பொதுமக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில் அநாகரீகமாக செயல்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு புகார்கள் வந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தாவரவியல் பூங்காவிற்கு வருகை தருபவர்கள் அடையாள அட்டையுடனதான் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், குறிப்பாக, திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையால், பூங்காவிற்கு இதுவரை வருகை தந்தவர்களில் 50 சதவீதம் பேரின் வருகை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, பூங்கா பகுதியில் மருத்துவத்தன்மை வாய்ந்த செடிகளை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவை விவசாய பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 
 

Advertisment

English Summary

Tamil Nadu university bars 'bachelors' from entering garden

 
NewsFast Logo