Advertisment

Punnagai Logo

தமிழரின் வராகயாவை மாற்றி(ஏமாற்றி) வயாகரா வந்ததா? - சித்த மருத்துவம்

வயாகரா ஆண்களின் எழுச்சிக்கான மருந்தாக உலக அளவில் பேசப்படுவது!

ஆனால், தமிழரின் வராகயாதான் வயாகராவாக மாற்றம் பெற்றதா? என்பதை ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.

பித்தாகரஸ் பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்குமுன் கோதையார் என்ற தமிழர் எழுதிய பாடலை வைத்தே பித்தாகரஸ் தேற்றம் உருவாக்கப்பட்டது.

உலகில் பல அறிவுசார் நுட்பங்களும் தமிழர்களுடையவையே! தமிழரின் மருத்துவம் இன்று உலக மருந்துகள் பலவற்றிற்கு அடிப்படை. இந்த வயாகராவும் அப்படித்தான்! தமிழ் மருத்துவத்தில் அமுக்குரா கிழங்கு ஆண்களின் எழுச்சிக்கும், ஆற்றலுக்கும் ஏற்ற மருந்து. அந்த அமுக்குராவின் மற்றொரு பெயர் வராகயா.
இதை, போகர் என்ற தலைசிறந்த தமிழ் மருத்துவர் தன் பாடலில் தெளிவாகக் கூறியுள்ளார்.

அமுக்கிறாப் பேர்தனையே அறியக் கேளு
அசுவகெந்தாவச்சி கெந்தாவாகும்
வமுக்குறா வராகயா வாரிய கறணி
வாசியாகரி கமிற்தாகம் புகாவாந்
துமுக்குறா துற்கியம் பாரிசாதா
துயமான சுபால்லியா பலாபலியாந்
அமுக்குறா தாவியதாலு பேரியாகுந்
சாத்தியதோர் வமுக்குறாப் பேருமாமே
என்று கூறியுள்ளார்.

ஆக, நம்முடைய அமுக்குரா கிழங்கின் வேறு பெயரான வராகயா என்பதை வயாகரா என்ற மாற்றி (ஏமாற்றி) உலக அளவில் கொள்ளையடிக்கிறார்களா என்பதை சித்த மருத்துவர்கள் ஆராய வேண்டும்.

நம் அமுக்கரா கிழங்கு (வராகயா) பற்றி டாக்டர் நட்காணி எழுதியுள்ள, 'Indian Meteria Medica’-வில் அதன் பயனைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
1. Impotance - ஆண்மை இன்மை நீக்கும்.
2. Seminal Debility - வீரியமின்மை போக்கும்
3. Sepetmetorrhoea - விந்தணுகுறை நீக்கும்
4. Loss of Muscular Energy - உடல் சோர்வு போக்கும்
5. Sterility use for women - பெண் மலடு நீக்கும்.
6. t’s Acts as an approdisiac and Restrorative to old men - வயதானவர்களுக்கும் எழுச்சி தரும்.

வெளிநாட்டு வயாகரா பல இரசாயனங்கள் சேர்த்து செய்யப்படுவதால் அதன் கேடுகள் அதிகம். பல உடல் பாதிப்புகளை, ஜி.ஙி. போன்ற நோய்களை உருவாக்கும். அவை விந்தணு எண்ணிக்கையைக் கூட்டாது. மலட்டுத் தன்மை போக்காது. தற்காலிக எழுச்சி தரும். நிரந்தர கேடு வரும்.

ஆனால், நமது அமுக்குறா (வராகயா) பக்க விளைவு, பாதிப்பு ஏதும் இல்லாமல் இயற்கையான முறையிலே குறைநீக்கி உடல் வலுப்பெற உதவக் கூடியது.

எனவே, வயாகரா போன்ற இரசாயன கலப்புடன் கூடிய மருந்துகளைத் தவிர்த்து, தமிழரின் இயற்கை பொருட்களால் குறைநீக்கி மகிழ்வோடு வாழ்வதே அறிவுடைமையாகும்.

அந்நிய மோகத்தில், நமது மண்ணின் மருந்துகளை, உணவுகளை மறந்து, பொருள் இழப்பையும், உடல்நலக் கேட்டையும் தேடிக்கொள்கிறோம். இந்நிலை முற்றிலும் மாற வேண்டும்.

மேலும், சித்த மருத்துவர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வயாகராவை ஒழித்து, வராகயாவை (அமுக்ரா கிழங்கை) பயனுள்ள மருந்தாக்கி உடல் நலங்காக்க வேண்டும். தமிழரின் மருத்துவ பெருமையை உலகறியச் செய்ய வேண்டும். இப்பதிவு சித்த மருத்துவர்களின் ஆய்வுக்கு ஒரு தூண்டுதலாய் அமையும்.

தமிழரின் இப்பெருமையை பலருக்கும் தவறாது பகிருங்கள். குறையுள்ளவர்கள் தரமான சித்த மருத்துவர் உதவியோடு நலம் பெறுங்கள்!
            

 
 

Advertisment

English Summary

Tamil varakayavai changed to vayakara?

 
NewsFast Logo