Advertisment

Punnagai Logo

ஈரோட்டில் பயங்கரம்..! - மனைவி கண் முன், கணவர் மர்ம உறுப்பை தாக்கி கொலை ..!

ஈரோடு, பெரியசேமூர் கல்லாங்கரடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார், 25; விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி லீலாவதி, 22. உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறில், லீலாவதி கண் முன்னே, செல்வகுமார் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து, வீரப்பன்சத்திரம் போலீசார் கூறுகையில் , ":கடந்த, 3ம் தேதி, செல்வகுமாருக்கு அண்ணி முறையான, லட்சுமி, 28, என்ற பெண், வீட்டை விட்டு வெளியேறினார். அவரை சங்ககிரியிலிருந்து, 6ம் தேதி, செல்வ குமார் அழைத்து வந்து, அவரது வீட்டில் விட்டு சென்றார்.

இந்நிலையில்,நேற்று பிற்பகலில், லட்சுமி வீட்டு வழியே செல்வகுமாரும், லீலாவதியும் நடந்து சென்றனர். அப்போது லட்சுமி, 'என்னை ஏன் இங்கு கூட்டி வந்தாய்?' எனக் கேட்டு, செல்வகுமாரிடம் தகராறில் ஈடுபட்டார்.திடீரென, மறைத்து வைத்திருந்த மரக்கட்டையால், செல்வகுமார் தலையில், மூன்று முறை பலமாக தாக்கினார். பின், பெரிய கல்லை எடுத்து, அவரது வலது காலில் போட்டார். மேலும், அவரின் மர்ம உறுப்பில் லட்சுமி பலமாக எட்டி உதைத்தார். இதில், சம்பவ இடத்திலேயே, செல்வகுமார் சுருண்டு விழுந்து இறந்தார்"..இவ்வாறு என கூறினர்.

மேலும் , கொலை தொடர்பாக ஆறு பேரை, வீரப்பன்சத் திரம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்

 
 

Advertisment

English Summary

Terror in Erode ..! - Before the wife's eye, her husband attacked and killed ..!

 
NewsFast Logo