Advertisment

Punnagai Logo

தா.பாண்டியன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..

சென்னை - : இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர், தா.பாண்டியன், 85, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 ஓராண்டாக, மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வரும் இந்திய கம்யூ., மூத்த தலைவரான தா.பாண்டியன்,. ஒரு மாதத்திற்கு முன், உடல் நலக்குறைவு ஏற்பட்டு, இரண்டு முறை, மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார், 

இந்நிலையில்,நேற்று மாலை, மீண்டும் மூச்சுத் திணறல் மற்றும் சிறுநீரக நோய் பாதிப்பால், சென்னை, ராஜிவ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

அவருக்கு, சிறுநீரக நோய்க்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.'தா.பாண்டியன், தற்போது நலமுடன் உள்ளார்; ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்' என, டாக்டர்கள் கூறினர்

 
 

Advertisment

English Summary

Tha. Pandian once again admitted to hospital

 
NewsFast Logo