Advertisment

Punnagai Logo

அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

திருச்சி, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு 105 டிகிரி வரை வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு நகரங்களில் வெயில் அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி 6 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருச்சியில் 104.36, திருத்தணியில் 104, வேலூரில் 103.64, மதுரையில் 102.92, சேலம் மற்றும் தருமபுரியில் தலா 102.2 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 2 நாட்களுக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், வேலூர் ஆகிய 8 மாவட்டங்களின் சில பகுதிகளில் 104 முதல் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக தேனி மாவட்டம் பெரியாரில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.

 
 

Advertisment

English Summary

The impact of the sun is over the next 2 days

 
NewsFast Logo