Advertisment

Punnagai Logo

கணவரின் மீதுள்ள கோபத்தில் குழந்தையை கொன்ற தாய்...- திருப்பூரில் பரிதாபம்..!

திருப்பூர்: கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை அறிந்து, இரண்டரை வயது பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாயை, போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜ், 24; சுமை துாக்கும் தொழிலாளி. இவரது மனைவி தமிழ் இசக்கி, 21; பனியன் தொழிலாளி. இவர்களுக்கு, இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் வேலைக்கு செல்வதால், அருகே வசிக்கும் நாகராஜ் தாய், குழந்தையை பார்த்து கொள்வார். கடந்த, 9ம் தேதி இரவு வேலை முடிந்து, நாகராஜ் வீடு திரும்பினார்.

அப்போது, குழந்தை மயக்க நிலையில் இருந்ததை கண்டு  அதிர்ச்சியடைந்தார். உடனே, கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றார். ஆனால், வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்

விஷயம் அறிந்து அங்கு வந்த  மங்கலம் போலீசார் விசாரித்ததில், குழந்தையின் தாயான, தமிழ் இசக்கியின் பதில்கள், முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால், போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

தொடர் விசாரணையில், குழந்தையை தண்ணீர், 'டிரம்'மில், மூழ்கடித்து கொலை செய்தது தெரிந்தது. இதனால், அவரை போலீசார், நேற்று காலை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்

இது குறித்து போலீசார் கூறுகையில், 

நாகராஜுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், தமிழ் இசக்கி, மனமுடைந்தார். அதனால், குழந்தையை கொலை செய்து, தானும் தற்கொலை செய்யும் முடிவெடுத்தார். 9ம் தேதி இரவு, 7:00 மணிக்கு முதலில், குழந்தையை, தண்ணீர் டிரம்மில் மூழ்கடித்து கொலை செய்து, தற்கொலைக்கு முயன்றுஉள்ளார். அப்போது, நாகராஜ், வீட்டுக்கு வந்து விடவே, தற்கொலை எண்ணத்தை கைவிட்டார். இந்த விவகாரத்தில், வேறு ஏதாவது காரணம் உள்ளதா... என்ற கோணத்திலும், தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.

என கூறினர்.

 
 

Advertisment

English Summary

The mother who killed the baby in the anger of her husband ... - The misery in Tirupur ..!

 
NewsFast Logo