Advertisment

Punnagai Logo

டி.என்.பி.எல். போட்டி - வெளிமாநில வீரர்களுக்கு அனுமதியில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம், தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க முடியாது என  உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டி.என்.பி.எல். எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, முதல் சீசனில் தூத்துக்குடி அணியும், 2வது சீசனில் சேப்பாக்கம் அணியும் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தற்போது 3வது சீசனில் முதல் போட்டி இன்று நெல்லையில் நடைபெறுகிறது.

உள்ளூர் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிப்பதற்காக நடத்தப்படும் இந்த போட்டியில், ஒவ்வொரு அணியும் 2 வெளிமாநில வீரர்களை நியமித்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெளிமாநில வீரர்களுக்கு அனுமதியில்லை என்று உத்தரவிட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

TNPL. Competition - The Supreme Court has ruled that external players are not allowed

 
NewsFast Logo