Advertisment

Punnagai Logo

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று கனமழை- வானிலை ஆய்வுமையம்

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு அதிகாரிகள் கூறுகையில், ''வெப்பச் சலனம் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய 7 மாவட்டங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை இருக்கும்'' என்று தெரிவித்துள்ளனர்

 
 

Advertisment

English Summary

Today's rainfall - weather forecasting

 
NewsFast Logo