Advertisment

Punnagai Logo

தகாத வார்த்தைகளால் அர்ச்சனை - தற்கொலைக்கு முயன்ற திருநங்கை போலீஸ் நஸ்ரியா 

போலீஸ் பயிற்சியில் சேர்ந்து பல மாதங்களிலேயே திருநங்கை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் நஸ்ரியா (வயது 23). திருநங்கையான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியில் சேர்ந்தார். ஆயுதப்படை குடியிருப்பில் தங்கி பணிக்கு சென்று வந்தார்.
 
இந்நிலையில் இவர் எலி மருந்தை தண்ணீரில் கலக்கி குடிப்பது போன்று காட்சி வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் நஸ்ரியா பேசும் காட்சியில் இன்ஸ்பெக்டர், சிறப்பு சார்பு ஆய்வாளர், தலைமை எழுத்தர் ஆகியோர் பணியின் போது என்னை தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர்.

இதனால் எனது மனது மிகவும் வேதனை அடைகிறது. எனவே தற்கொலை செய்யும் எண்ணத்தில் எலி மருந்தை குடித்து விட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நஸ்ரியாவை உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது கடந்த 3 வாரத்திற்கு மேலாக நஸ்ரியா எவ்வித தகவலும் தெரிவிக்காமல் விடுப்பு எடுத்தது தெரியவந்துள்ளது.

பணிக்கு தவறாமல் வர வேண்டும் என உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும், அவரது நடத்தை குறித்து யாரும் விமர்சிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் பயிற்சியில் சேர்ந்து பல மாதங்களிலேயே திருநங்கை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 
 

Advertisment

English Summary

Transgender police attempts suicide

 
NewsFast Logo