அரக்கோணத்தில் பள்ளி மாணவிகள் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பனப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த ரேவதி, சங்கரி, தீபா, மற்றும் மணிஷா ஆகியோர் அண்மையில் கிணற்றில் குதித்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
மாணவிகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பனப்பாக்கம் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எதிர்ப்பு வலுத்ததால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே தலைமை ஆசிரியர் அருண்குமார் மற்றும் ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோர் மீது உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்ததாகக் கூறி பனப்பாக்கம் பள்ளி முன்பு மாணவர்கள் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Vellore School Girls Sucide Row: Students Support Head Master