Advertisment

Punnagai Logo

விநாயகர் சதுர்த்திக்கு வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்ற முடிவு - ஹிந்து முன்னணி

ஸ்ரீவில்லிபுத்துார்: விநாயகர் சதுர்த்திக்கு இடையூறு செய்வதை கண்டித்து வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றுவோம்,'' என ஹிந்து முன்னணி இணை அமைப்பாளர் பொன்னையா தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கடந்த 34 ஆண்டுகளில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிகளில் இல்லாத இடையூறை தற்போதைய பழனிசாமி அரசு செய்கிறது. ஹிந்து மதத்தின் மாண்பை, பாரம்பரியத்தை காப்பாற்ற சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் மேற்கொள்கிறார். அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை எனில் தமிழகம் முழுவதும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் துவங்குவோம்.

மேலும்,தமிழக அரசை கண்டிக்கும் விதமாக கறுப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை தெரிவிப்போம். சுமூக முடிவை எடுக்காவிட்டால் தமிழக அரசை கண்டித்து வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றுவோம், என்றார்.ஹிந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் யுவராஜ், ராஜு உடனிருந்தனர்.

 
 

Advertisment

English Summary

Vinayagar Chaturthi to decide on the black flag in houses - Hindu munnani

 
NewsFast Logo