Advertisment

Punnagai Logo

இதமான தென்றல், மிதமான சாரல் – ஆளை மயக்கும் குற்றாலம் சீசன்

குற்றாலத்தில் நேற்றும், இன்றும்  சீசன் அருமையாக இருந்து வருகிறது. இதமான தென்றல் காற்று, மிதமான சாரல், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு என சீசன் களை கட்டத் துவங்கியுள்ளது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் முன்னதாகவே துவங்கியதுடன், தொடர்ந்து அருவிகளில் தண்ணீர் விழுகிறது. சீசன் துவங்கிய இருபது நாட்களில் மூன்று முறை மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளிக்க தடை விதிக்கும் அளவிற்கு தண்ணீர் கொட்டியது.தொடர் சாரல் மழையால் குற்றாலம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி முழுவதும் பச்சைப்பசேல் என்று பசுமை நிறைந்து காட்சியளிக்கிறது. 

சிற்றாற்றில் தண்ணீர் வரத்தும் சீராக உள்ளது. படகு சவாரி விடப்படும் வெண்ணமடைக்குளம் இந்த ஆண்டு முன்னதாகவே முழுமையாக நிரம்பி விட்டது. சுற்றுலா பயணிகளும் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. 

நேற்று மதியம் வரை லேசான வெயில் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு மீண்டும் மேகக்கூட்டம் திரண்டு அவ்வப்போது சாரல் பெய்தது. 
காற்று அவ்வப்போது பலமாக வீசியது. சுற்றுலா பயணிகள் வருகையும் ஓரளவு நன்றாக உள்ளது.

மொத்தத்தில் குற்றாலத்தில் சீசன் களை கட்டத் துவங்கியுள்ளது.

 
 

Advertisment

English Summary

Warm breeze - kutralam season

 
NewsFast Logo