Advertisment

Punnagai Logo

தென் மாநிலங்களில் பாஜக எதிர்ப்பு அலை.. ஏபிபி சர்வே முடிவுகள்..! 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாநிலங்களில் பாஜக எதிர்ப்பு அலை நிலவுவதாக ஏபிபி சர்வே முடிவுகளில் தெரியவந்துள்ளது. 

வடக்கிலும், வாடா கிழக்கிலும் பாஜக ஆதரவு நிலை காணப்படுவதாக இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆனால் தென் மாநிலங்களில் அப்படியே தலைகீழாக மாறிப் போய் விட்டது. 

மொத்தம் உள்ள 129 தொகுதிகளில் வெறும் 21 தொகுதிகள்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு. இதில் பாஜகவுக்கு எத்தனை கிடைக்கும் என்பது தெரியவில்லை. கூட்டணியாகவே 21 தொகுதிகள்தான். 

தென் மாநிலங்களில் திமுக, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட மாநிலக் காட்சிகள் கணிசமான தொகுதிகளை அள்ளப் போவதை இந்த கருத்துக் கணிப்பு சுட்டிக் காட்டுகிறது.

தமிழகத்தில் வலுவான திமுக கூட்டணி அமைந்தால் அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். அதை விட முக்கியமாக கர்நாடகத்தில் பாஜகவுக்கு பெரும் அடி விழும் எனத் தெரிய வந்துள்ளது. 

கேரளாவிலும் பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நல்ல செல்வாக்குடன் உள்ளது. சபரிமலை விவகாரத்தை வைத்து அங்கு ஏதாவது மத அரசியல் செய்ய முடியுமா என்று பாஜக முனையலாம். 

மொத்தத்தில், பாஜகவுக்கு எதிரான அலை தென் மாநிலங்களில் வலுவாக இருப்பதை இந்த கருத்துக்கணிப்பு சுட்டிக் காட்டியுள்ளது. காங்கிரஸ் சாதுர்யமாக செயல்பட்டு வலுவான மெகா கூட்டணியை அமைக்க முன்வந்தால், பா.ஜ.க ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட வாய்ப்புள்ளது.  

 
 

Advertisment

English Summary

wave against BJP in southern states

 
NewsFast Logo