Advertisment

Punnagai Logo

மதுக்கடையை மூடாவிட்டால் உங்களுக்கும் ஓட்டு கிடையாது - ஸ்டாலினுக்கு அதிர்ச்சி தந்த பெண்மணி!

'முதல்ல மதுக்கடைகளை எப்போ மூடப் போறீங்க... அதைச் சொல்லுங்க. மதுக்கடையை மூடாவிட்டால் உங்களுக்கும் ஓட்டு கிடையாது' என்று மு.க.ஸ்டாலின் நடத்திய கிராமசபைக் கூட்டத்தில் கிராமத்துப் பெண் அதிரடியாகப் பேசி சலசலப்பை ஏற்படுத்தினார்.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில் கிராமங்களில் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி வருகிறது திமுக. மாவட்டம் தோறும் சில குறிப்பிட்ட கிராமங்களை தேர்வு செய்து மு.க.ஸ்டாலினும் மக்களோடு அமர்ந்து குறைகளை கேட்டு வருகிறார்.

நேற்று சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தார். தமிழர்களின் அடையாளமாகத் திகழ்கிறது கீழடி. இந்த ஊர் அடங்கியுள்ள மானாமதுரை உள்ளிட்ட 18 தொகுதிகள் வீணாக காலியாக உள்ளது. அதிமுக அரசு மக்கள் பிரச்னைகளில் கவனம் கொள்ளாத அரசாக இருக்கிறது என்றெல்லாம் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது லட்சுமி என்ற பெண் திடீரென மைக் பிடித்து, "முதல்ல மதுக்கடைகளை எப்போ மூடப் போறீங்க... அதைச் சொல்லுங்க.. எங்களுக்கு வீடு, வாசல் கூட தேவையில்லை... மதுக்கடைகள் தான் பிரச்னை.... நீங்களும் மூடாவிட்டால் உங்களுக்கும் ஓட்டு கிடையாது" என்று பேசியதும் பிற பெண்கள் கைதட்டி ஆமோதித்தனர். இதனால் கிராம சபைக் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

 
 

Advertisment

English Summary

Women raises tasmac issue to Stalin

 
NewsFast Logo