Advertisment

Punnagai Logo

இனி, ‘நோ டென்ஷன்…’ வாகன ஓட்டிகளே!

சென்னை மாநகராட்சி போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடுகிறது. குறிப்பாக, இருக்கும் வாகனங்களை, போக்குவரத்துக்கு இடையூறாக, ரோடு ஓரங்களிலும், குறுக்காகவும் நிறுத்துவதாலேயே, போக்குவரத்து தடைபடுகிறது. இதை எப்படி சீர் செய்யலாம் என, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வெகு காலமாக மண்டையை உடைத்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாடுகளில் இருப்பது போன்ற டிஜிட்டல் பார்க்கிங் சிஸ்டத்தை, விரைவில் சென்னையில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் பதினைந்து மண்டலங்களிலும் உள்ள முக்கிய சாலைகளின் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் கண்காணிப்பு கேமராவுடன் கூடிய டிஜிட்டல் பார்க்கின் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதல் கட்டத்தை, அண்ணா நகர், மெரினா, புரசைவாக்கம், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். மிகப் பெரிய மால்கள், முக்கிய சாலைகளின் சந்திப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் பனிரெண்டாயிரம் கார்கள், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள் கண்டறியப்பட்டு விட்டது.

இந்த சேவையைப் பயன்படுத்த விரும்பும் வாகன ஓட்டிகள் GCC என்ற செயலியை தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் வங்கி விவரங்களுடன் பதிவு செய்து விட்டால், பயணத்தில் செல்ல விரும்பும் இடங்களில் எந்த பகுதியில் காரை நிறுத்த வேண்டுமோ அந்த இடங்களில், நமக்கான இடங்களை இந்த செயலி காட்டும். இதற்கான கட்டண பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் ஆன்-லைன் வசதி செய்யப்பட்டுள்ளது.

 

 
 

Advertisment

English Summary

digital parking

 
NewsFast Logo