Advertisment

Punnagai Logo

ஸ்விகி, உபேர் டெலிவரி பாய்ஸ்க்கு வேலை போகிறது - களம் இறங்கும் ரோபோ நாய்கள்  

கூரியர் கம்பெனிகளிலும், ஸ்விகி, உபேர் போன்ற உணவு சப்ளை நிறுவனங்களிலும் வேலைபார்க்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை பறிபோக வாய்ப்புள்ளது. 

டெலிவரி பாய்ஸ் வேலையை ஈடுகட்ட ரோபோ நாய்கள்  அறிமுகமாகின்றன. காண்டினெண்டல் என்ற நிறுவனம் வீட்டுக்கு வீடு டோர் டெலிவரி செய்யும் ரோபோ நாய்களை அறிமுகம் செய்கிறது. 

இந்த ரோபோ நாய்களை ஏற்றிச்செல்லும் ட்ரைவர் இல்லா வாகனங்கள் ஆங்காங்கே சாலையில் நின்றுகொண்டு, ரோபோ நாய்களை டோர் டெலிவரி செய்யவைத்து பின்னர் திரும்ப ஏற்றிவந்துவிடும். இதற்கான சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

இதுபோன்ற ரோபோ நாய்கள் இன்னும் ஓராண்டுக்குள் வீதிவீதியாக வலம்வர ஆரம்பித்துவிடும் எகிறார்கள். ஸ்விகி, உபேர் போன்ற உணவு சப்ளை நிறுவனங்களில் வேலைபார்க்கும் டெலிவரி பாய்ஸ்க்கு வேலை பறிபோகும் வாய்ப்பு நெருங்குகிறது. 
 

 
 

Advertisment

English Summary

Dog robots to replace delivery boys

 
NewsFast Logo