Advertisment

Punnagai Logo

பார்வையற்றவர்களின் கண்களாக உதவும் விரல் சைஸ் கேட்ஜெட்

 கண்பார்வை இல்லாமல் வாழ்வது எவ்வளவு கடினம்? கண் பார்வையை இழந்தவர்களுக்குப் புதிய சிகிச்சை முறைகள் இருந்தாலும் அவை அனைவருக்கும் பொருந்தாதவை. ஒரு சில காரணங்களால் மீண்டும் தங்கள் பார்வையை அடைய முடியாத நிலைமைக்குச் செல்கின்றனர். அப்படி இருப்பவர்களின் வாழ்க்கை “எங்கும் வெளியே செல்ல முடியாது, யாரையும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது” என எவ்வளவு கொடுமையானதாக மாறுகிறது. 

 தற்போது இதற்கும் ஒரு தீர்வைக் கண்டுள்ளனர் வல்லுநர்கள். இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ள புதிய கேட்ஜெட் 'MY EYE'. இதை OrCam என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு மூலம் பார்வையற்றவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

 

Image result for orcam my eye

 

நாம் போகுமிடங்களில் உள்ளதையெல்லாம் கேமரா படமெடுத்து அனுப்ப, அதை உடனடியாக ஆராய்ந்து, அந்தத் தகவலை உங்கள் காதருகே சொல்லிவிடும். இது படிப்பதற்கு, தெரிந்தவரை அடையாளம் கண்டுகொள்வதற்கு, என்ன பொருள் எனத் தெரிந்துகொள்வதற்கு என அனைத்து வகையிலும் உதவக்கூடியது. நாம் போகுமிடங்களில் எவ்வளவோ இருக்கும், அவற்றுள் பெரும்பாலானவை தேவையற்றவையாக இருக்கும், அந்த இடத்தில் அனைத்தையும் படித்து நம்மைக் குழப்பிவிடும் என நினைக்க வேண்டாம். எதைப் படிக்க வேண்டும் அல்லது எதைப்பற்றி அறிய வேண்டுமோ அதை விரலால் சுட்டிக்காட்டிய பின்னர் அதைப் படித்துக் காண்பிக்கும் (Touch Reading).

 

Image result for orcam my eye

 

புத்தகங்கள், செய்தித்தாள்கள், கணினி அல்லது செல்போன் திரையில் உள்ளவை என அனைத்தையும் இது படித்துச் சொல்லும்.  ஒரு நிமிடத்திற்கு 150 முதல் 160 வார்த்தைகளைப் படிக்கும் வேகத்தைக் கொண்டது. இந்த வேகத்தை 250 வார்த்தைகள் வரை நமக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். 

 முதல்முறை ஒருவரைச் சந்திக்கும்போது அவரது பெயரை நீங்கள் சொன்னால், அவரது முகம் மற்றும் பெயரை அப்படியே பதியவைத்துக்கொள்ளும். நீங்கள் கைகாட்டி சொல்லும் பெயரை மட்டுமே பதிவுசெய்து கொள்ளும். அடுத்தமுறை அதே முகத்தைப் பார்த்தவுடன் அவரது பெயரையும், அவர் இங்கே இருக்கிறார் என்பதையும் உங்கள் காதுகளில் சொல்லும்

 

Image result for orcam my eye

 

பொருட்கள் மற்றும் இடங்களின் பெயர்கள் இதேபோல், அவற்றைப் பார்த்தவுடன் உங்களுக்குச் சொல்லும். பணம் எவ்வளவு என உங்கள் விரலை அதன்மீது வைத்ததும் சொல்லிவிடும். எலக்ட்ரானிக் கருவி தானே, இதை ஹேக் செய்துவிட்டால் என்கிற பயம் தேவையற்றது. MY EYE இல் நடைபெறும் அனைத்துச் செயல்பாடுகளும் அந்தக் கருவியினுள்ளே நடைபெறுபவை. வெளியிலிருந்து எந்த இணைப்பும் தேவையில்லை மற்றும் கொடுக்கப்படுவதில்லை. இதனால் இதனை ஹேக் செய்வது முடியாத காரியம்.

 
 

Advertisment

English Summary

Finger-sized gadget that helps blind people

 
NewsFast Logo