Advertisment

Punnagai Logo

பிளிப்கார்ட்டிற்கு வந்த சாம்சங் s9 - 57,900 ரூபாய்க்கு ப்ரீ புக்கிங்

 மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சாம்சங், இந்திய சந்தைகளில் எஸ்9 ஸ்மார்ட்போனை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. தற்போது பிளிப்கார்ட்டிற்கு வந்த சாம்சங் s9 கைபேசியை  57,900 ரூபாய்க்கு ப்ரீ புக்கிங் செய்து கொள்ளலாம். ஆனால் சந்தைக்கு அது மார்ச் 15 ஆம் தேதியே வர உள்ளது.

இதுகுறித்து சாம்சங் இந்தியா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (மொபைல் வர்த்தகம்) அசிம் வர்ஸி செய்தியாளர்களிடம் கூறியதாவது

கேலக்ஸி வரிசையில் அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எஸ்9 மற்றும் எஸ்9ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன், 5.8 அங்குல திரை, 4ஜிபி ரேம், 12எம்பி பின்பக்க கேமரா, 8எம்பி முன்பக்க கேமரா, 3,000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியது. 64 ஜிபி மற்றும் 256ஜிபி உள்நினைவகத் திறன் கொண்ட மாடல்களின் விலை முறையே ரூ.57,900 மற்றும் ரூ.65,900-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி வரிசையில் மற்றொரு அறிமுகமான எஸ்9ப்ளஸ் ஸ்மார்ட்போன், 6.2 அங்குல திரை, 6ஜிபி ரேம், 12எம்பி பின்பக்க-முன்பக்க கேமரா, 3,500 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட சிறப்பம்சங்களை உள்ளடக்கியது. 64ஜிபி மற்றும் 256ஜிபி நினைவகத் திறனுள்ள மாடல்களின் விலை முறையே ரூ.64,900 மற்றும் ரூ.72,900-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எஸ்9 மற்றும் எஸ்9ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் நினைவகத்திறனை 400ஜிபி வரை நீடித்து கொள்ளலாம். இப்புதிய ஸ்மார்ட்போன்கள் மார்ச் 16-ஆம் தேதி முதல் விற்பனையகங்களில் கிடைக்கும்.

எஸ்9 ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இதுவரையில் எந்தவொரு போனிலும் உணராத டேட்டா வேகத்தை இந்த மாடல்களில் கண்டு உணர பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு கொண்டுள்ளோம். சாதாரண மொபைல்களில் தற்போதைய நெட்வொர்க் மூலம் கிடைக்கும் டேட்டா வேகத்தை காட்டிலும், எஸ்9 மாடல்களில் அதன் வேகம் 2.5 மடங்கு அதிகமாக இருக்கும் என்றார் அவர்.

 
 

Advertisment

English Summary

Samsung s9 arrives in Flipkart - Pre-Booking for 57,900 rupees

 
NewsFast Logo