Advertisment

Punnagai Logo

என் பெற்றோரை காப்பாற்றுங்கள் !! கண்ணீர் விட்டு கதறிய பிரபல நடிகர் !

கேரளாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் மக்கள் படும் அவஸ்தையை நாம் தினமும் பார்த்துவருகிறோம்.

அந்த வகையில், கண்டேன் காதலை, ராவணன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகர் முன்னா உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்

முன்னா கூறுகையில், தமது தாயும் தந்தையும், திருச்சூரில் வெள்ள நீர் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு தேவாலயத்தில் சிக்கியுள்ளதாகவும் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 500 பேர் அங்கு உணவு, குடிநீர் இன்றி சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இன்று தமது தந்தையின் பிறந்தநாள் என்றும் இந்த வீடியோ மூலம் அவருக்கு உணவாவது தம்மால் வழங்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தபோது அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

விரைவில் அவர் குடும்பம் மட்டுமல்ல வெள்ளபாதிப்பிலிருக்கும் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப சினிஉலகத்தின் சார்பாகவும் வேண்டிக்கொள்கிறோம்.

 

 
 

Advertisment

English Summary

Save my parents !! Famous actress who cried in video !

 
NewsFast Logo