மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் கிறிஸ் ஃகெய்ல், இடது கையில் தவற விட்ட பந்தை வலது கையில் கேட்ச் செய்த விதம், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
முன்னதாக,கனடாவில் நடைபெற்ற குளோபல் டி-20 தொடரில், கிறிஸ் ஃகெய்ல் தலைமையிலான வன்கூவர் நைட்ஸ் (Vancouver Knights) அணி கோப்பை வென்றது.
இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் B அணியை அந்த அணி எதிர்கொண்டது. இதில் மேற்கிந்திய தீவுகள் B அணி வீரர் Kavem Hodge அடித்த பந்து, ஸ்லிப்பில் நின்ற கிறிஸ் கெய்லை நோக்கிச் சென்றது. அப்போது இடது கையால் பந்தை பிடிக்க ஃகெய்ல் முயன்றார்.
ஆனால் பந்து நழுவியது. கேட்ச் தவறி விட்டதாக அனைவரும் நினைத்த நேரத்தில், யாரும் எதிர்பாராத வகையில் வலது கையால் அற்புதமாக கேட்ச் செய்தார்.
இது போன்ற ஒரு கேட்ச் இதற்கு முன் கிரிக்கெட் உலகம் பார்த்ததுண்டா..? என கேள்வி எழுப்பும் வகையில் அமைந்துள்ளதாக வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
English Summary
The fantastic "catch" of the bowl - the historic miracle of cricket - the video