Advertisment

Punnagai Logo

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 8K எனப்படும் அதிநவீன வீடியோ

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 8K எனப்படும், மிகவும் துல்லியம் வாய்ந்த UHD (Ultra High Definition) வீடியோவை ஒளிபரப்பி நாசா சாதனை படைத்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வீடியோ கோப்புக்களின் தரமும் உயர்த்தப்பட்டு வருகின்றது. இறுதியாக 4K எனப்படும் HD வீடியோ தொழில்நுட்பம் பயன்பாட்டில் காணப்பட்டு வந்தது. இவ்வாறான வீடியோக்களை யூடியூப் தளத்திலும் பார்வையிட முடியும்.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக நாசா நிறுவனம் 8K எனப்படும் UHD (Ultra High Definition) வீடியோவை ஒளிபரப்பி சாதனை படைத்துள்ளது.

இவ் வீடியோ சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஒளிபரப்பப்ட்டுள்ளது. இம் முயற்சியில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் பங்கெடுத்துள்ளது.

தற்போதுள்ள வீடியோ வகைகளுள் 8K எனப்படும் UHD (Ultra High Definition) வீடியோதான் மிகவும் துல்லியம் வாய்ந்த வீடியோ தொழில்நுட்பம் ஆகும்.

 
 

Advertisment

English Summary

8K Video from ISS

 
NewsFast Logo