Advertisment

Punnagai Logo

கம்போடியாவில் நிர்வாணமாக நடனம் ஆடிய வெளிநாட்டினர் கைது...

கம்போடியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து நாட்டினர், அங்குள்ள பிரபல சுற்றுலாத்தலமான அங்கோர்வாட் பகுதியில், ஆடையில்லாமல் நிர்வாணமாக பாட்டுப்பாடியும், நடனமும் ஆடியுள்ளனர். இதனால், அங்கு வந்திருந்த பொதுமக்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். 

இதுகுறித்து அந்நாட்டு போலீசாரிடமும் புகார்களும் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பயணிகளை கைது செய்த கம்போடிய போலீசார், பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். 

பின்னர், நீதிமன்றத்தில் அதற்கான உரிய சாட்சியங்களும், ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டது. வெளிநாட்டு பயணிகள் என்பதால் அவர்களுக்கு பெரிய அளவிலான தண்டனை வழங்கப்படவில்லை. 

இதுபோன்று சம்பவங்களுக்குக் காரணம் அங்கோர்வாட் பகுதியில் இரவு நேர விடுதிகளில் மதுபானம் விற்க அனுமதிக்கப்பட்டதுதான் என்பது தெரிய வந்துள்ளது.   

 
 

Advertisment

English Summary

Cambodia Arrests Foreigners For 'Pornographic Dancing'

 
NewsFast Logo