Advertisment

Punnagai Logo

நிலவில் முளைத்தது முதல் தாவரம்..! சீனா நிகழ்த்திய அதிசயம்..! வீடியோ

நிலவுக்கு சீனா அனுப்பிய CHANGE - 4 விண்கலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இதுவரை அறியப்படாத நிலவின் தொலைதூர பகுதியில் ஜனவரி 3 ஆம் தேதி பத்திரமாக தரை இறங்கியதே முதல் சாதனை. பூமிக்கு எதிர் திசையில் உள்ள நிலவின் சமவெளி பகுதியில் இந்த விண்கலம் தரை இறங்கியது. 

இந்த விண்கலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ஆய்வு சாதனங்களில் மண், பருத்தி விதைகள், உருளைக்கிழங்கு விதைகள்,  யீஸ்ட் நுண்ணுயிர்கள் உள்ளிட்டவை அடங்கும். 

நிலவில் தாவரங்களை வளரச் செய்து அங்கே உயிர்ச்சூழலை உருவாக்க முடியுமா என்ற முக்கிய சோதனை நடைபெறுகிறது. இது சாத்தியமெனில் எதிர்காலத்தில் செவ்வாய் போன்ற தொலைதூர கிரகங்களுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் நிலவில் சிறிது காலம் தங்கி ஓய்வெடுத்துச் செல்லலாம் என்பது திட்டம்.

இத்திட்டத்தின் முதல் வெற்றியாக நிலவில் பருத்தி விதைகள் முளைத்துள்ளன. அதன் புகைப்படங்களை சீன விண்வெளி ஆய்வுத்துறை வெளியிட்டுள்ளது. 

பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் ஏற்கெனவே தாவரங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. 

ஆனால் பூமியில் இருந்து 3,84,400 கிலோ மீட்டர் தூரத்தில் பயணிக்கும் நிலவில் ஒரு தாவரம் முளைப்பது என்பது இதுவே வரலாற்றில் முதல் முறை. 

 
 

Advertisment

English Summary

China's Moon mission sees first seeds sprout

 
NewsFast Logo