Advertisment

Punnagai Logo

நாய் சாட்சி ..! - அமெரிக்காவில் ஒரு வினோத வழக்கு..!

அமெரிக்காவில் ஒரு நாயால் தொழிலாளி ஒருவர் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனையில் இருந்து தப்பி உள்ள சம்பவம் நடந்துள்ளது..

அந்த நாட்டின் ஓரேகான் மாகாணத்தைச் சேர்ந்த 42 வயதான ஜோசுவா கோமர் என்ற குழாய் பராமரிப்பு தொழிலாளி மீது அவரது மகள் பாலியல் புகார் கொடுத்தார். இது குறித்த விசாரணையின் போது, தான் வளர்த்த லூசி என்ற நாயை கோமர் சுட்டுக் கொன்றதாகவும், இதே போல தம்மையும் கொன்று விடுவதாக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் மகள் கூறினார்.

இதன் பேரில் கோமருக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கோமர் தாம் குற்றமற்றவன் என்று கூறியதை அடுத்து, ஓரேகானைச் சேர்ந்த தனியார் சட்ட அமைப்பு நடத்திய விசாரணையில் லூசி என்ற அந்த நாய் கீயர்ஹார்ட் நகரில் ஒருவரது வீட்டில் இருப்பது தெரியவந்தது. அந்த நாயை நீதிமன்றத்தில் நிறுத்தி, கோமர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். கோமர் மகள் மீது இப்போது புதிதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

Dog witness .. - a strange case in the US ..!

 
NewsFast Logo