அமெரிக்காவில் பறக்கும் காரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் தயாரிக்கப்பட்டு, பிளாக் ஃபிளை என்று பெயரிடப்பட்ட அந்தக் கார் 62 மைல் வேகத்தில் தொடர்ச்சியாக 25 மைல் தூரம் பறந்து சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மின்சாரம் மூலம் இயக்கப்படும் இத்தகைய பறக்கும் காரின் மின்கலன் வெறும் 25 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் திறன் கொண்டது. பிளாக் ஃபிளையின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்டபின், அடுத்த ஆண்டு முதல் இந்தக் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கார் தயாரிப்பு நிறுவன தலைமைச் செயல் அதிகாரி மார்க்கஸ் லங் தெரிவித்துள்ளார்.
English Summary
Flying Car's First Look Release - 'Amazing' AMERICA..!