Advertisment

Punnagai Logo

சாலையில் வீசி எறியப்பட்ட பணம் - பொது அமைதியை கெடுத்ததாக இளைஞர் கைது

ஹாங்காங்கின் ஷாம் ஷு பேய் என்ற பகுதியில் உள்ள மாடிக் கட்டிடம் ஒன்றில் ஏறிநின்றபடி, பொது மக்கள் மீது 18 லட்சம் ரூபாய் பணத்தை வீசி எறிந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹாங்காங்கை சேர்ந்த வாங் சிங் கிட் என்பவர், கிரிப்டோகரன்சிகளில் செய்த முதலீடு மூலம் நிறைய கோடிகளை சம்பாதித்து உள்ளார். அவர், தான் சம்பாதித்ததில், 8 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, ஒரு மாடி மீது ஏறி நின்றபடி, அந்தப்பணத்தை மக்கள் மீது வீசி எறிந்தார் . 

புதிய கிரிப்டோகரன்சிக்கு இவர் கொடுத்த விளம்பரங்கள் மூலம் நிறைய வருமானம் பெற்றார் . தற்போது இவரது வங்கி கணக்கில் சில கோடிகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

24 வயதான சிங் கிட் சொகுசு காரில் வந்திறங்கி கட்டிடத்தின் மாடியில் விறுவிறுவென ஏறி, பணத்தை அள்ளி எறிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பணமழை பெய்ததால் உடனே அந்த பகுதியில் பெரிய அளவில் கூட்டம் கூடியது. கீழே கூடிய மக்கள் அவர் தூக்கி எறிந்த பணத்தை, மக்கள் சண்டையிட்டு எடுத்து செல்லும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. 

இந்நிலையில் அவர் பணத்தை தூக்கி எறிந்த சில மணி நேரங்களில் பொது அமைதியை கெடுத்ததாக கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில், மக்களுக்கு உதவவும், ஏழை மக்கள் பயன் பெறவும், ஒரு ராபின் ஹுட் போல செயல்பட வேண்டும் என்று ஆசையில் பணத்தை வீசி எறிந்ததாக கூறியுள்ளார். 

 
 

Advertisment

English Summary

Hong kong money rain

 
NewsFast Logo