Advertisment

Punnagai Logo

இந்தோனேசியாவை சுனாமி தாக்கியது - குறைந்தது 20 பேர் பலி 

இந்தோனேசியாவை சில மணி நேரங்களுக்கு முன்னதாக சுனாமி தாக்கியது 

சுந்தரா ஜலசந்தியை சுற்றிய கடற்கரை பகுதிகள் சுனாமி பேரலையால் தாக்கபட்டன. 

இரண்டு பேரலைகள் தாக்கியதாகவும், இரண்டாவது பேரலையால் கூடுதல் அழிவு நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.  

சுனாமி தாக்கியதில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளனர். குறைந்தது 165 பேர் காயம் அடைந்துள்ளனர். 

பலர் காணாமல் போயிருப்பதாகவும், கட்டடங்கள் இடிந்து விழுந்திருப்பதாகவும் அரசாங்கக் பேரிடர் அமைப்பு வெளியிட்ட முதல்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரகட்டோ எரிமலை வெடிப்பை தொடர்ந்து, பெரும் மலைப்பகுதி கடலில் விழுந்ததால் சுனாமி ஏற்பதாக கூறப்படுகிறது. 

 
 

Advertisment

English Summary

Indonesia tsunami - 20 died

 
NewsFast Logo